சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறைமுடிந்து தமிழகம் முழுவதும்பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவ தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள், இதர பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்றேமாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். 2-ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க வேண்டும்.
» தமிழகத்தில் அக்.11-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு
» இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் 72 விமானங்கள் சாகசம்
மேலும், பருவ மழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி அந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர மாணவர்கள் பங்கேற்கும் கலைத் திருவிழா போட்டிகளுக்கான நடைமுறைகள், மகிழ் முற்றம் திட்டத்தில் மாணவர் குழுக்களை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளையும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும்என பள்ளிகல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கல்வி
9 hours ago
கல்வி
12 hours ago
கல்வி
12 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago