சென்னை: ‘இந்து தமிழ் திசை’ - டாப்பர்ஸ் கிளாஸ் இணைந்து நடத்தும் ‘கையெழுத்து பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி அக்.11 முதல் 15 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
கையெழுத்து அழகாக இருக்க வேண்டுமென்ற விருப்பம் அனைவருக்கும் உண்டு. முறையான முயற்சியோடு பயிற்சியையும் மேற்கொள்வோருக்கு கையெழுத்து அழகாக அமைந்துவிடும்.
அத்தகைய விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையவழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாப்பர்ஸ் கிளாஸ் உடன் இணைந்து நடத்தும் ‘கையெழுத்து பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி வரும் அக்.11 முதல் அக்.15 வரை தொடர்ந்து 5 நாட்கள் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.
இந்த கையெழுத்து பயிற்சியை மாணவர்களின் வரைதல், சதுரங்கம், நடனம் மற்றும் சிறப்பு திறன்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கான பல பயிற்சிகளை பல்லாண்டுகளாக வழங்கிவரும் பெருந்துறையிலுள்ள கிட்ஸ் அகாடமி மற்றும் டாப்பர்ஸ் கிளாஸின் நிறுவனரும் புகழ்பெற்ற கையெழுத்து பயிற்சியாளருமான என்.சிந்துஜா புவனேஷ் வழங்கவுள்ளார்.
இவர் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கையெழுத்து திறனை மேம்படுத்தி, அவர்கள் அதிக மதிப்பெண்களை பெற பயிற்சியளித்துள்ளார். இந்த பயிற்சியில் எழுதும்போது உட்கார்ந்திருக்கும் தோரணை, எழுத பயன்படுத்தும் பேனா, பென்சில் போன்றவற்றை வைத்திருக்கும் முறை, சிறிய மற்றும் பெரிய எழுத்துகள், எண்கள், சொற்கள், வாக்கியம், பத்தி ஆகியவற்றை எழுதும் முறைகள் பற்றி பயிற்சியளிக்கப்படும்.
கையெழுத்து பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/HANDWRITING என்ற லிங்க்கில், ரூ.589/- மட்டும் (வரிகள் உட்பட) கட்டணமாக செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடின் மூலமாகவும் பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9894220609 என்ற செல் பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
5 hours ago
கல்வி
9 hours ago
கல்வி
14 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago