சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.கணேசன் அனைத்து கல்வியியல்கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) பிஎட். 2-ம் ஆண்டு 3-வது பருவம் பயிலும் மாணவர்கள் கற்றல்- கற்பித்தல் பயிற்சிக்கு செல்ல குறிப்பிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கியுள்ளது.
மாணவர்கள் எந்த பள்ளியில்கற்றல்- கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றஇந்த பள்ளிகளின் பட்டியல் ஆசிரியர்கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தபட்டியல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிலாக்-இன் வாயிலாக அனுப்பிஉள்ளோம்.
எனவே, கல்லூரி முதல்வர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் கற்றல்- கற்பித்தல்பயிற்சியை சிறந்த முறையில்முடிக்க உரிய ஒத்துழைப்புஅளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகி்றார்கள். மாணவர்களின் வருகைப்பதிவு சம்பந்தப்பட்ட பள்ளியால் இணையவழியில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
8 hours ago
கல்வி
12 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago