சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் ரோபோடிக்ஸ் நவீன கற்றல் மையம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ரூ.5 கோடி செலவில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப மையத்தை சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி, குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கற்றல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: “இந்த தொழில் நுட்பமானது 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன இயந்திரம் ஆகும். கார் தொழிற்சாலைகள், மருத்துவத் துறை, எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலை வாய்ப்பை எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்துள்ளது.இதன் மூலம் ஏராளாமான மாணவர்கள் வேலைவாய்ப்பில் பயன் பெறுவர். இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பல பொறியாளர் மாணவர்களை தமிழகத்தில் இருந்து உருவாக்க முடியும் என்பதே இதன் இலக்கு. இந்த ரோபோடிக் இயந்திரத்தில் பல வகையான விஷயங்களை நாம் எளிதாக கையாள முடியும்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை KUKA மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி ஆலன் ஃபேம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம், ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்திய்தியாளர்களிடம் சிஜடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் மற்றும் KUKA நிறுவனத்தின் மேலாளர் ராகவன் கூறியதாவது: “இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோபோடிக் பயிற்சி மையம் தமிழகத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய ரோபோடிக் கற்றல் மையம் எதற்காக ஏற்படுத்தி இருக்கிறோம் என்றால், தமிழக அரசு வெளிநாடுகளில் இருந்து நிறைய தொழிற்சாலைகளைத் தொழில் தொடங்க அழைத்து வரவுள்ளது. அப்படி வரும்போது அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த ரோபோட்டிக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருங்காலத்தில் அதிகமான ரோபோடிக் பொறியாளர்களை உருவாக்க இந்த கற்றல் மையத்தை தொடங்கியிருக்கிறோம் .

மேலும், மருத்துவத் துறையில் சிக்கலான அறுவமை சிகிச்சை, எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், பிசியோதெரபி, போன்றவற்றை சிரமமின்றி எளிதாக கையளும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் ரோபோட் ஒரு இயந்திரமாக இல்லாமல் மருத்துவரின் கையாகவே இருந்து செயல்படும் ரோபோட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற நாடுகள் இந்தியாவை விட ரோபாட்டில் 30 மடங்கு வளர்ந்து இருக்கிறார்கள். இந்தியாவில் இப்போதுதான் இந்த துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதோடு நிறைய பொருட்களை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்யவும் முடியும். இதனால் உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருக்கும். 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன இயந்திரங்கள் இவை. கார் தொழிற்சாலைகள், மருத்துவத்துறை, எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல்வேறு வேலைகளை எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில்நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன்களை ரோபோடிக் இல்லாமல் உற்பத்தி செய்யவே முடியாது. ஒரு சில வேலைகளை ரோபோடிக் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள ரோபோட்டிக் எண்ணிக்கையில் ஐந்து சதவீதம் கூட நம் நாட்டில் கிடையாது. ஆனால் இனிவரும் காலங்களில் இந்தியா அந்த மார்க்கெட்டை பிடிக்கப் போகிறது. இதனால், வேலைவாய்ப்புகளும் இந்தியாவில் அதிகமாக உருவாகும். ஆபத்தான தொழில் மற்றும் மீண்டும் செய்யக்கூடிய தொழில்களில் மக்கள் சோர்வடைந்து, பாதிக்கப்படுவார்கள்.

ரோபோட்டிக் அதுபோல அல்ல. இது மக்களுக்கு உதவுமே தவிர மக்கள் நலனை பாதிப்பதாக இருக்காது. ரோபோட்டிக்கை உருவாக்கவும், இயக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே ரோபோட்டிக்கால் வேலைவாய்ப்பு அதிகமாகுமே தவிர குறையாது.மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்ளும் வகையில் குறைந்த கட்டணத்தில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும்,” என்று அவர்கள் கூறினா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

5 hours ago

கல்வி

5 hours ago

கல்வி

10 hours ago

கல்வி

10 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்