மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்: பள்ளி கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள துறை சார்ந்த சட்டப்பேரவை அறிவிப்புகள், செயல்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது குறித்தும், அது சார்ந்து செய்ய வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தற்போதைய நிதி நெருக்கடி பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான பணிகளை முன்னெடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார்.

தலைமை செயலருடன் சந்திப்பு: பள்ளிக்கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டத்துக்கு முன்பாக அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழகஅரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தத்தை நேற்றுசந்தித்தார். அப்போது பிஎம் ஸ்ரீபள்ளிகள் திட்டத்தில் இணைவது,மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கான நிதியைப்பெறுவது உட்பட விவகாரங்கள்குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE