சென்னை: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024-25) நாள்காட்டியில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் 220 என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பணி சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன.
அதை ஏற்று, கடந்த ஜூலையில் பள்ளி வேலை நாளாக இருந்த ஒரு சனிக்கிழமை (ஜூலை 13) விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு ஆகஸ்ட் மாதத்திலும் பள்ளிகள் செயல்பட இருந்த 10 (இன்று) 24-ம் தேதி சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தொடக்கப் பள்ளிகளில் எஸ்எம்சி குழு மறுகட்டமைப்பு பணிகள் இன்றுநடைபெறும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து இந்த நிகழ்வை முறையாகநடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வேலை நாட்களை 210 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
13 hours ago
கல்வி
13 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago