மருத்துவக் கல்வி: அரசுப் பள்ளி மாணவர்கள் 10% இடஒதுக்கீடு சான்றிதழ் நடைமுறை மாற்றம் @ புதுச்சேரி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மருத்துவக் கல்வி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சான்றிதழ் பெறும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 10 சதவீத அரசு ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகின்றது. கடந்த ஆண்டு 10 சதவீத இடஒதுக்கீட்டில் 20 மாணவர்கள் எம்பிபிஎஸ்., படிப்பில் சேர்ந்தனர். இதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் புதுச்சேரி பிராந்தியத்தில் முதன்மை கல்வி அதிகாரியிடமும், மற்ற பிராந்தியங்களில் மண்டல கல்வி அதிகாரியிடம் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படித்ததாக கல்விச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகளி டம் அரசுப் பள்ளி மாணவர்கள் சென்று சான்றிதழ் பெற்று விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த கல்வி சான்றிதழ் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளில் தொடர்ச்சியாக 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்ததற்கான கல்வி சான்றிதழை பெற்று சமர்ப்பித்தால் போதும் என சென்டாக் அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழை பள்ளி கல்வித் துறை ஆய்வு செய்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, சென்டாக் இந்த முடிவினை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE