சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வின் முதல்சுற்றில் 24,177 மாணவர்களுக்கு நேற்று தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் இந்த ஒதுக்கீட்டு ஆணையை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இக்கலந்தாய்வில் பங்கேற்க அகாடமிக் பிரிவில் 26,678 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவில்1406 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 2,272 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
விருப்பமான கல்லூரி மற்றும்பாடப்பிரிவை தேர்வு செய்யஅவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதற்கான காலக்கெடு 31-ம்தேதி மாலை 5 மணிக்கு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைநேற்று காலை 10 மணிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும்.
» கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
அதன்பிறகு அவர்களுக்கு நாளை (3-ம் தேதி) காலை 10மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு இறுதி ஆணை வழங்கப்படும். அந்த ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்ட மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்லூரியில்ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago
கல்வி
12 days ago