வருகை பதிவில் ஆள்மாறாட்டம்: பேராசிரியர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் வருகை பதிவில் ஆள்மாறாட்டம் செய்தால் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சில மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள், தங்களது வருகை பதிவுகளை, போலியாக பதிவு செய்வதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனை என்எம்சி தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது. எனவே, அனைத்து பேராசிரியர்களும் தங்களது வருகைப் பதிவுகளை, கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் மூலம் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும். வருகை பதிவில் ஆள்மாறாட்டம் ஏதேனும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE