முதல்வரின் ஆராய்ச்சி நிதியுதவிக்கு கருத்துரு சமர்ப்பிக்க அவகாசம்

By செய்திப்பிரிவு

சென்னை: முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வரின் ஆராய்ச்சி நிதியுதவி திட்டத்தின்கீழ் மானிய உதவி வழங்கப்படுகிறது.

முதுகலை மாணவர்கள் தாங்கள் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரையும், ஆராய்ச்சி ஆசிரியர்கள் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரையும் 3 ஆண்டு காலம் பெறலாம்.

இந்நிலையில், 2024-25 கல்வி ஆண்டில் முதல்வரின் ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கு கருத்துருக்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆக. 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE