சிவகங்கை: கல்லலில் நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி பசுஞ்சோலையாக மாறியதோடு, நவீன வசதி, சிறந்த கற்பித்தல் முறையால் மாண வர்கள் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம், கல்லலில் 107 ஆண்டுகால அரசுப் பள்ளி உள்ளது. கடந்த 1917-ம் ஆண்டு போர்டு பாடசாலையாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, தற்போது ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியாக உள்ளது. இங்கு வெற்றியூர், மேலப்பூங் குடி, கீழப்பூங்குடி, வேப்பங்குளம், கல்லல், தேவப்பட்டு, செம்பனூர், கீழக்கோட்டை, சடையம்பட்டி, பிளார், செவரக்கோட்டை, அரண்மனைசிறுவயல் ஆகிய கிராமங் களைச் சேர்ந்த 263 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரி யர் உட்பட 6 ஆசிரியர்கள் உள்ளனர்.
மேலும் இப்பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் புதிதாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார். இதனால், தற்போது மரங்கள் வளர்ந்ததோடு தோட்டங் களை உருவாக்கியதால் பள்ளி வளாகமே பசுஞ்சோலையாக மாறி உள்ளது. இங்கு கல்வியோடு கணினி, பேச்சு ஆங்கிலம், பல்வேறு கலை கள், சிலம்பம், விளையாட்டு போன்றவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நவீன வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்பறையும் உள்ளது.
காற்றோட்டமான இயற்கை யான சூழ்நிலையாலும், ஆசிரியர் களின் சிறந்த கற்பித்தலாலும் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வருகின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராயன் கூறியதாவது: இப்பள்ளியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தேன். அப்போது 100 மாணவர்கள் இருந்தனர். தற்போது 263 மாணவர்கள் உள்ளனர். இந்தக் கல்வியாண்டில் மட்டும் 125 பேர் புதிதாகச் சேர்ந்தனர்.
» எங்க ஊருக்கு எப்ப ரோடு போடுவீங்க..? - சிறுகாலூர் கிராம மக்கள் கேள்வி
» மூத்தோர் உலகக் கோப்பை: இந்திய அணியில் ‘ஸ்டேன்ஸ் பள்ளி’யின் முன்னாள் மாணவர்கள்!
பொதுமக்களிடம் இருந்து ரூ.15 லட்சம் நன்கொடை பெற்று பள்ளிக் கட்டிடங்களை மராமத்து செய்து வண்ணம் பூசினோம். புதிதாக தோரண வாயில், விழா மேடை கட்டினோம், கணினி வாங்கினோம். மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தோம். நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். ஆங்கில வழிக் கல்வியையும் அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
கல்வி
19 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago