பிபிஏ, பிசிஏ படிப்பு அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: 2024 - 25-ம் கல்வியாண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அனுமதிபெறும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை பெற முடியும்.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவானது கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 15) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பானகூடுதல் விவரங்களை உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைதளத்தில் சென்று அறியலாம் என்று இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புதிய நடைமுறை என்பதால் கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE