சிஏ இறுதி தேர்வு முடிவு: டெல்லி மாணவர் முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனம் சிஏ எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வை ஆண்டுக்கு 2 தடவை (மே மற்றும் நவம்பர் ) நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிஏ இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகள் மே மாதம் குரூப்-1, குரூப்-2 என பிரிவுகளாக நடத்தப்பட்டன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் (www.icai.nic.in) நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி, சிஏ இறுதி தேர்வில் குரூப்-1 பிரிவில் 74,887 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், அவர்களில் 20,479 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், குரூப்-2 பிரிவில் 58,891 பேர் தேர்வெழுதியிருந்த நிலையில் அதில் 21,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இறுதி தேர்வில் டெல்லி மாணவர் சிவ்ராம் மிஸ்ரா 83.33 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், டெல்லி மாணவி வர்ஷா அரோரா 80 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், மும்பை மாணவி கிரண் ராஜேந்திர சிங், நவி மும்பை மாணவர் கில்மான் சாலீம் அன்சாரி ஆகியோர் 79.50 சதவீத மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE