பொறியியல் கல்லூரி சேர்க்கை தரவரிசை பட்டியலில் சாதித்த சேலம் மாணவி ரவணி!

By வி.சீனிவாசன்

சேலம்: பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில், தரவரிசைப் பட்டியில் அரசுப் பள்ளிகளுக்கான 7.5 இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேலம் மாணவி ரவணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சேலம், இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வம் - சிவரஞ்சனி தம்பதி. இவர்களின் மகள் ரவணி. இவர் பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள வீரபாண்டி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். ரவணி பிளஸ் 2 பொதுத் தேர்வில், இயற்பியல், கணித பாடத்தில் தலா 100 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண் என மொத்தம் 586 மதிப்பெண்கள் பெற்றார்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியில் அரசுப் பள்ளிகளுக்கான 7.5 இடஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவி ரவணி 199.50 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்திலேயே தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி ரவணியை, அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE