பள்ளி பாடப் புத்தகங்கள் அனைத்தும் ஜூலைக்குள் கிடைக்கும்: என்சிஇஆர்டி விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து வகுப்புகளுக்குமான 6 பாடப் புத்தகங்களும் ஜூலை 2024-க்குள் கிடைக்கும் என்று என்.சி.இ.ஆர்.டி விளக்கம் அளித்துள்ளது.

பாடப் புத்தகங்கள் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு என்.சி.இ.ஆர்.டி. அளித்துள்ள விளக்கத்தில், "அனைத்து வகுப்புகளுக்குமான 6 பாடப் புத்தகங்களும் ஜூலை 2024-க்குள் என்.சி.இ.ஆர்.டி மூலம் கிடைக்கும். மாதங்கள் ஆகும் என வெளியான செய்தி தவறானது.

அனுபவ கற்றல் கண்ணோட்டத்தின் கீழ் நேரடி அனுபவங்களுக்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் போதுமான நேரத்தை வழங்குவதற்கும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும் பழைய பாடத் திட்டத்திலிருந்து புதிய பாடத் திட்டத்திற்கு சுமுகமாக மாறுவதை உறுதி செய்வதற்கும், என்.சி.இ.ஆர்.டி ஏற்கெனவே 6-ஆம் வகுப்பிற்கான அனைத்து 10 பாடப் பகுதிகளிலும் ஒரு மாத கால இணைப்புத் திட்டத்தை வழங்கியுள்ளது. இது தற்போது கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

2. 3, 6 வகுப்புகளைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், தற்போதுள்ள பாடத்திட்டம் அல்லது பாடப்புத்தகங்களில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கல்வியாண்டில் (2023-24) செய்ததைப் போலவே இந்த வகுப்புகளுக்கு அதே பாடப் புத்தகங்களைத் தொடர்ந்து பயன்படுத்துமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ மீண்டும் அறிவுறுத்தியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE