மதுரை காமராஜர் பல்கலை.யில் இளநிலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம் ஏன்?

By என்.சன்னாசி

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சில ஆண்டாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஒவ்வொரு மாதமும் பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு முறையே சம்பளம், ஓய்வூதியம் வழங்கு வதிலும் சிரமம் உள்ளது. இது போன்ற சூழல் பல்கலைக்கழகம் வருவாயை பெருக்க, நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்தன. இவற்றில் ஒன்றான பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் நேரடி இளநிலை பாடப் பிரிவுகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

துணை வேந்தராக இருந்த ஜெ.குமார் முயற்சியால் பி.காம், பி.ஏ, தமிழ் இலக்கியம், ஆங்கிலம், கணிதம், டேட்டா சயின்ஸ், பிஎஸ்சி ஆர்பியூசியல் சயின்ஸ், சைபர் கிரையம் ஆகிய 7 பாடப்பிரிவுகள் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டன. சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 2 மற்றும் 3ம் ஆண்டில் படிக்கின்றனர். இவர்களுக்கு நிரந்தர உதவி பேராசிரியர்கள் நியமனமின்றி, தொகுதிப் பூதியத்தில் 18-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பாடம் எடுக்கின்றனர். இவர்களுக்கு பல்கலைக் கழகத்திற்கான சிறப்பு திட்டத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. இளநிலை மாணவர்களுக்கான போதிய ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதியின்மை மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் நிர்வாகம் சில சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், வழக்கம் போன்று இவ்வாண்டும் இளநிலை வகுப்புகளில் சேர சுமார் 1600-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஜூன் இறுதி வரை அட்மிஷனுக்கான தகவல் வராத நிலையில், திடீரென 2 நாளுக்கு முன்பு இப்பல்கலை.யில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை திடீரென ரத்து என, பல்கலை. நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியானது. சிண்டிகேட், செனட் கமிட்டியின் ஒப்புதல் இன்றியே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறுகின்றனர்.

இருப்பினும் 2, 3-ம் ஆண்டுக்கான மாணவர்கள் வகுப்புகள் தொடர்ந்து நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கை திடீர் ரத்தால் விண்ணப்பித்தவர்கள் வேறு கல்லூரிக்கு போக முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு மதுரை - அழகர் கோயில் சாலையிலுள்ள பல்கலைக்கழக கல்லூரியில் வாய்ப்பளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், அங்கு விரும்பிய பாடப்பிரிவுகள் இன்றி தவிக்கின்றனர். முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியதால் பிற கல்லூரிகளிலும் சேர முடியாமலும் எதிர்காலம் பாதிக்கும் என, மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறுகையில், "பல்கலைக்கழகத்துக்கான வருவாயை பெருக்கும் விதமாக புதிதாக இள நிலை பாடப் பிரிவு தொடங்கினோம். இருந்தாலும், நிதியை அதிகரிக்க முடியாத சூழல் உள்ளது. போதிய ஆயவக வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் சிக்கல் உள்ளதால் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இளநிலை வகுப்பெடுக்கும் கவுரவ ஆசிரியர்களுக்கு பல்கலை.யின் ரூசா திட்டத்தில் இருந்தே சம்பளம் வழங்கப் பட்டது. தொடர்ந்து வழங்க முடியாத சூழலிலும் ஏற்பட்டது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் வகுப்பெடுக்க அறிவுறுப்பட்டுள்ளது," என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

17 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்