என்சிசி படிப்புக்கு அங்கீகாரம் அவசியம்: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

By சி.பிரதாப்

சென்னை: என்சிசி பயிற்சியை தேர்வுப் பாடமாக பயிற்றுவிக்க கல்லூரிகள் அதற்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

நம் நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தேசப்பற்று மற்றும் ஒற்றுமை உணர்வுகளை வளர்க்கும் விதமாக ‘தேசிய மாணவர் படை’ (என்சிசி) இளம் வயது முதலே வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ராணுவம், காவல் துறைகள் சார்ந்த வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேசமயம் விளையாட்டைப் போல கல்வி துணைசார் பாடப் பிரிவுகளில்தான் என்சிசி இடம்பெற்றிருந்தது.

அதன்பின் கல்லூரிகளில் என்சிசி பயிற்சியானது விருப்பப் பாடப்பிரிவு பட்டியலில் 2021-ம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. இதுதவிர என்சிசி பாடப்பிரிவை பயிற்றுவிப்பதற்கான வழிகாட்டுதல்களும் பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) வெளியிடப்பட்டது. இந்நிலையில், என்சிசி பாடமாக வழங்கும் கல்லூரிகள் அதற்கான அங்கீகாரத்தை சார்ந்த இயக்குநரகத்திடம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இன்று அனுப்பிய சுற்றறிக்கையில், “கல்லூரிகள் என்சிசி பயிற்சியை தேர்வு பாடமாக வழங்குவதற்கு என்சிசி இயக்குநரகத்திடம் அங்கீகாரம் பெறுவது அவசியமாகும். மேலும், தேசிய மாணவர் படையில் சேருவதற்கு பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே அதை விருப்பப் பாடமாக தேர்வு செய்து பயில முடியும். இதை கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

15 hours ago

கல்வி

18 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

மேலும்