உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கைக்கு யுஜிசி அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவின் விவரம்: நடப்பு கல்வியாண்டு (2024-25) முதல் ஜூலை - ஆகஸ்ட் மற்றும் ஜனவரி- பிப்ரவரி என ஆண்டுக்கு இரு முறை உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம்.

இத்திட்டம் தேர்வு முடிவுகள் தாமதம், உடல்நலப் பிரச்னைகள் உட்பட பல்வேறு காரணங்களால் ஜூலை-ஆகஸ்ட் மாத சேர்க்கையில் சேர முடியாத மாணவர்களுக்கு பலன் தரும்.

அதேபோல், தொழில் நிறுவனங்களும் வளாக நேர்காணலை ஆண்டுக்கு 2 முறை நடத்தலாம். உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழங்கள் இத்தகைய சேர்க்கை நடைமுறையைதான் பின்பற்றுகின்றன. இதன்மூலம் உலகளாவிய கல்வி தரங்களுடன் இணைந்து போட்டியிட்டு மேம்பட முடியும்.

அதேநேரம் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை என்றநடைமுறையை உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயமில்லை. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டஉயர்கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், உயர்கல்விமாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் பகுதிகளில் புதிய பாடத்திட்டங்களை வழங்குவதற்கும் இந்த நடைமுறை உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

மேலும்