மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையராக (பொறுப்பு ) கடந்த 3 ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தர்மராஜ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பல்கலைக்கழக பதிவாளரிடம் கொடுத்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவரான தர்மராஜ், கடந்த 2020 நவம்பரில் கூடுதல் பொறுப்பாக தேர்வாணையராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளை தாண்டியும் அவர், அந்த பொறுப்பில் நீடித்தார். இருப்பினும், அவருக்கு எதிராக சில சர்ச்சைகளும் எழுந்த நிலையில், தேர்வாணையர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள முடிவெடுத்தார்.
மேலும், அவர் சிண்டிகேட் உறுப்பினராகவும் தேர்வு பெற்றதால் , ஒரே நபர் இரு பொறுப்புகளில் நீடிக்க முடியாத சூழலில் தனது ராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். இது பரிசீலனையில் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago