சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 13.16 லட்சம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் தமிழகத்தில் 8 பேர் உட்பட67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நம்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும்நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது.
அதேபோல், ராணுவ நர்சிங்கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 23 லட்சத்து33,297 பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தேர்ச்சி விகிதம் உயர்வு: இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தாண்டு ஒரு லட்சத்து52,920 பேர் தேர்வு எழுதியதில் 89,426 (58.47%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்வுஎழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2023-ல் 1,44,514பேர் தேர்வு எழுதியதில் 78,693 (54.45%) பேர் தேர்ச்சிபெற்றனர்.
தமிழக மாணவர்கள் முதலிடம்: நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சையது ஆரிபின் யூசுப், எஸ்.சைலஜா, ஆதித்யா குமார் பண்டா,பி.ராம், பி.ராஜநீஷ், எம்.ஜெயதி பூர்வஜா, ஆர்.ரோகித், எஸ்.சபரீசன்ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ள னர். இதுதவிர ஓபிசி -6 லட்சத்து 18,890 பேரும், எஸ்சி - ஒரு லட்சத்து78,738 பேரும், எஸ்டி -68,479 பேரும்,பொதுப்பிரிவு (யுஆர்)-3 லட்சத்து 33,932 பேரும், இடபிள்யூஎஸ் -ஒருலட்சத்து 16,229 பேரும் இடம் பிடித்துள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் 4,120 பேரும் மருத்து வம் படிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.
கட்-ஆஃப் மதிப்பெண்கள்: நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி பொதுப்பிரிவு மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 720 முதல் 164 வரையான மதிப்பெண்களில் (50 பெர்சன்டையில்) 11 லட்சத்து 65,904 பேர் இடம் பெற்றுள்ளனர். ஓபிசியில் 163 முதல் 129 வரையான மதிப்பெண்களில் (40 பெர்சண்டையில்) ஒரு லட்சத்து 789 பேரும், எஸ்சி, எஸ்டி பிரிவில் 163 முதல் 129 மதிப்பெண்களில் (40 பெர்சன்டையில்) 48,804 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
பொதுப்பிரிவு மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 163 முதல் 146 வரைமதிப்பெண்களில் (45 பெர்சன்டை யில்) 455 பேரும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 145 முதல் 129 வரையானமதிப்பெண்களில் (40 பெர்சன்டையில்) 336 பேரும் இடம் பெற்றுள்ள னர். நீட் நுழைவுத்தேர்வில் சென்றஆண்டைவிட கட்-ஆஃப் மதிப்பெண் சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago