சென்னை: கர்னாடக இசை வாய்ப்பாட்டு அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மியூசிக் அகாடமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கர்னாடிக் மியூசிக் பள்ளியில் கர்னாடக இசை வாய்ப்பாட்டில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. 3 ஆண்டு காலம்கொண்ட இந்த உயர் டிப்ளமோபடிப்பு, ஆண்டுக்கு 2 செமஸ்டர் களை (ஜூலை - நவம்பர் மற்றும் ஜனவரி - ஏப்ரல்) கொண்டது.
இப்படிப்பில், வரும் 2024-25கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வர்ணம், கீர்த்தனை பாடத் தெரிந்திருக்க வேண்டும். அதோடு, மனோதர்ம சங்கீத அறிவும் அவசியம்.
இதில் சேர விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை மியூசிக் அகாடமியின் இணையதளத்தில் (www.musicacademymadras.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், சுய விவரத்தையும் music@musicacademymadras.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கும்.
வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இசை வகுப்புகள் நடைபெறும்.
சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய, சென்னை ராயப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சென்னை மியூசிக் அகாடமி அலுவலகத்தை நேரிலோ, 044-28112231, 28115162, 28116902 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago