ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருது

By செய்திப்பிரிவு

சென்னை: ‘அன்பாசிரியர் 2023’ விருதுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்க பெருமையுடன் காத்திருக்கிறது. மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளை போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா மற்றும் லெட்சுமி செராமிக்ஸ் இணைந்து வழங்குகின்றன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்ச்சியாகக் கற்பித்துவரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ஏற்கெனவே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க வேண்டாம்.

அன்பாசிரியர் தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் ஆன்லைன் வழியாக நடைபெறும். தங்களது அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் முதல்கட்ட நேர்காணலில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.

மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணல் நேரில் நடத்தப்படும். ​

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.

அதனுடன் சுயவிவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள் / வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின்நன்முயற்சிகளுக்குப் பிறகுமாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப்படிவத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.

கூடுதல் தகவல்களுக்கு மு.முருகேசனை செல் எண்7401329364 அல்லது murugesan.m@hindutamil.co.in மின்னஞ்சல்முகவரியில் தொடர்புகொள்ளலாம். வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியாக அனுப்ப முடியாதவர்கள், விண்ணப்ப படிவத்தை https://www.htamil.org/AAFORM என்ற லிங்க்-ல் டவுன்லோட் செய்து, ‘அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ்திசை, 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு, மேற்சொன்ன ஆதாரங்களின் நகலுடன் வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் வந்துசேரும்படி அஞ்சல் வழியாக அனுப்பலாம். அதிக தகவல்கள் இருப்பின், தனிக் காகிதத்தில் எழுதி அனுப்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்