4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் தொழில்நுட்ப, கலாச்சார, விளையாட்டு விழா: சென்னை ஐஐடி-யில் நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் வருடாந்திர தொழில்நுட்ப கலாச்சார, விளையாட்டு விழா (பேரடாக்ஸ்) சென்னை ஐஐடியில் நாளை (மே 30) கோலாகலமாக தொடங்குகிறது.

சென்னை ஐஐடியில் ரெகுலர்முறையில் படிக்கும் மாணவர்களுக்காக சாஸ்த்ரா, சாரங் ஆகியதொழில்நுட்ப கலாச்சார விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதே போன்று ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய ஆன்லைன் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்காக பேரடாக்ஸ் என்றபெயரில் வருடாந்திர தொழில்நுட்ப, கலாச்சார, விளையாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா சென்னை ஐஐடியில் நாளை (30-ம் தேதி) தொடங்கி ஜுன் 2-ம் தேதி வரைகோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் பிஎஸ் ஆன்லைன் படிப்பு படிக்கும் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இவ்விழாவில் தொழில்நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு தொடர்பான 57 வகையான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கள்திறமைகளை வெளிப்படுத்து வார்கள்.

அரிய வாய்ப்பு: ‘‘மாணவர்கள் தங்களிடம் மறைந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொணர இந்த விழா அருமையான வாய்ப்பு’’ என்று ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார். பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் கூறும்போது, ‘‘இந்நிகழ்வை முழுக்க முழுக்க மாணவர்களே முன்னின்று நடத்த உள்ளனர். திறமைகளை வெளிப்படுத்தவும், புதியவிஷயங்களை கற்றுக்கொள்ள வும் இது ஓர் அரிய வாய்ப்பு’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

16 hours ago

கல்வி

19 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்