தமிழகத்தில் அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

By சி.பிரதாப்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் 2.58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 58,527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2 லட்சத்து 11,010 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

அதேநேரம் இது கடந்தாண்டைவிட குறைவாகும். சென்ற ஆண்டு 2.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2.37 லட்சம் கட்டணம் செலுத்தியிருந்தனர். இதற்கிடையே கட்டணம் செலுத்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். அந்தவகையில் நடப்பாண்டு கலந்தாய்வில் 2.11 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த அரசுக் கல்லூரிகளுக்கு மே 27-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து கல்லூரிகள் அளவிலான மாணவர் சேர்க்கை மே 28 முதல் ஜூன் 29-ம் தேதி வரை இருகட்டங்களாக நடத்தப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.tngasa.in/ எனும் வலைத் தளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044–24343106 / 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்