‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ | பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆன்லைன் வழிகாட்டும் தொடர்: நாளை நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டு தலையும் வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ எனும் ஆன்லைன் தொடர் நிகழ்வின் 13, 14-வது பகுதிகள் நாளை (மே 25) மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள 13-வது பகுதியில் ‘நர்சிங் & பாரா மெடிக்கல் படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், திருச்சி எஸ்ஆர்எம் கேம்பஸ் துணை இயக்குநர் டாக்டர் என்.பாலசுப்ர மணியன், கோவை பிஎஸ்ஜி ஐஎம்எஸ்ஆர் இயக்குநர் (ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன்) பேராசிரி யர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் சுதா ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 14-வது பகுதியில் ‘சிவில் & ஆர்கிடெக்‌சர் துறையில் உள்ள படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், சவீதா இன்ஜினீயரிங் கல்லூரியின் சிவில் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் எம்.கல்பனா, சென்னை சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என்.ஆனந்தவள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

இந்த இரு நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார். இந்த நிகழ்வில், பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய பலவகையான படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், கல்விக் கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்வின் நிறைவாக, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.

பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/UUK006 என்ற லிங்க்-ல் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். முதலில் பதிவுசெய்யும் 20 மாணவர்களுக்கு பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் வி.டில்லிபாபு இணைந்து எழுதிய ‘இந்தியா 75’ எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE