சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது,எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் வகையில், விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற ஆன்லைன் தொடர் நிகழ்வின் 10, 11-வது பகுதிகள் இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணி மற்றும் மாலை 6 மணிக்கும், 12-வது பகுதி நாளை (ஞாயிறு) மாலை 6 மணிக்கும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்குகின் றன. இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள 10-வது பகுதியில் ‘ரோபோட்டிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் & விர்ச்சுவல் ரியாலிட்டி துறையில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், சென்னை விஐடி ஸ்கூல் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை உதவிப் பேராசிரியர் ஜி.முரளிமோகன், பெங்களூரு ஏஆர்கே இன்ஃபோஷொலுசன்ஸ் நிறுவன கன்ட்ரி மேனேஜர் ஜெ.விஸ்வேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 11-வது பகுதியில் ‘ஃபுட் டெக்னாலஜி & அக்ரிகல்ச்சர் சயின்ஸ் துறையில் உள்ள வாய்ப்பு
கள்’ என்ற தலைப்பில், கோவை தமிழ்நாடு விவசாய பல்கலை. பேராசிரியர் ஏ.பரணி, மைசூரு டிஃபென்ஸ் ஃபுட் ரிசர்ச் லேபரட்டரி அசோசியேட் டைரக்டர் டாக்டர் ஆர்.குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 12-வது பகுதியில் ‘விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் & ஃபிலிம் டெக்னாலஜி கோர்சஸ் மற்றும் வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில், சென்னை ஆவிச்சி கலை, அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.அபிநயா, தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் அகாடமிக் இன்சார்ஜ் பேராசிரியர் ஜெ.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
» வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி
» குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்கா: இஸ்ரோவுடன் தமிழக அரசின் ‘டிட்கோ’ ஒப்பந்தம்
இந்த இரு நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
இந்த நிகழ்வில், பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய படிப்புகள், நுழைவுத் தேர்வுகள், கல்விக் கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும்
இல்லை.
பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/UUKW05 என்ற லிங்க்-ல் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும் 30 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்’ என்ற நூல் பரிசாக வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
கல்வி
5 hours ago
கல்வி
5 hours ago
கல்வி
7 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago