சென்னை: ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருதுகளை வழங்க ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமையுடன் காத்திருக்கிறது.
மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி,நற்பண்புகளைப் போதித்து,பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதே ‘அன்பாசிரியர்’ விருதாகும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஏற்கெனவே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தயவுகூர்ந்து இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
» முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவனின் மேல்படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கடிதம்
இந்த விருதுக்கு தபால், இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். அல்லது நேரில் சென்னை, மதுரை,திருச்சி, கோவை, நெல்லையில் உள்ள ‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். (மதுரை: 147/2A, 80 அடி சாலை, மதுரை - 625 020, திருச்சி: சென்னை பைபாஸ் ரோடு, செந்தண்ணீர்புரம், திருச்சி - 620 004, கோவை: 391/1.2, காமராஜர் சாலை,உப்பிலிபாளையம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்- 641015,நெல்லை: 75/A, திரிபுரா ஆற்காடுதிருவனந்தபுரம் ரோடு, திருநெல்வேலி - 627 002)
என்ன செய்ய வேண்டும்? - கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
அதனுடன் சுயவிவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள்/வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், https://www.htamil.org/AAFORM விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து, “அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை, 124, வாலாஜாசாலை, சென்னை-2’’ என்ற முகவரிக்கு, மேற்சொன்ன ஆதாரங்களின் நகல்களுடன் ஜூன் 15-ம்தேதிக்குள் வந்து சேரும்படி அஞ்சல்வழியாக அனுப்பலாம். அதிகமான தகவல்கள் இருப்பின் தனி காகிதத்தில் எழுதி அனுப்பலாம்.
அன்பாசிரியர் தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழகம் மற்றும் புதுச்சேரி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் ஆன்லைன் வழியில் விரைவில் நடைபெறும்.
தங்களது சாதனை சான்றிதழ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களுடன் ஆன்லைன் முதல் கட்ட நேர்காணலில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணல் நேரில் நடத்தப்படும்.
மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 39 பேருக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படும்.
வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் https://www.htamil.org/AA2023 என்ற லிங்க்-ல் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு மு.முருகேசனை 7401329364 என்ற செல் எண் அல்லது murugesan.m@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்புகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
5 hours ago
கல்வி
10 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago