பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 80% தேர்ச்சி: வெவ்வேறு பாடங்களில் 7 பேர் சென்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வெவ்வேறு பாடங்களில் 7 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்த ஆண்டு நடைபெறபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 2,471 பேர், மாணவிகள் 3,136 பேர் என மொத்தம் 5,607 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 80.08 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 70.98 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி 87.24 சதவீதம் ஆகும்.

கணினி அறிவியல் பாடத்தில் 3 பேர், கணினி பயன்பாடு பாடத்தில் 2 பேர், வணிகவியல் பாடத்தில் ஒருவர், இயற்பியல் பாடத்தில் ஒருவர் என மொத்தம் 7 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 25 மாணவர்கள் 551-க்கு மேலும், 111 பேர் 500 முதல் 550 மதிப்பெண் வரையும், 254 பேர் 451 முதல் 500 மதிப்பெண் வரையும் பெற்றுள்ளனர்.

மதிப்பெண் அடிப்படையில் புல்லா அவென்யூ மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அத்திப்பட்டு மாநகராட்சி பள்ளி 2-ம் இடத்தையும் பெற்றுள்ளன. தேர்ச்சி சதவீத அடிப்படையில் நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அப்பாசாமி தெரு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்