10-ம் வகுப்பு தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 24-ல் இருந்து 10-ம் இடத்துக்கு முன்னேற்றம்!

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 94.11 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 90.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 24-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், தற்போது 3.54 சதவீதம் அதிகரித்து மாநில அளவில் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளது. அதேபோல் அரசுப் பள்ளிகளில் 93.51 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

தேர்வுமுடிவுகளை வெளியிட்டு ஆட்சியர் பழனி கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 240 அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக், சுயநிதி உள்ளிட்ட 360 பள்ளிகளைச் சேர்ந்த 24,093 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 22,673 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வெழுதிய 12,414 மாணவர்களில் 11,456 பேரும், 11,679 மாணவிகளில் 11,217 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.11 ஆகும். 958 ஆண்கள், 462 பெண்கள் உள்ளிட்ட 1,420 பேர் தோல்வியடைந்துள்ளனர். அவர்களுக்கு உடனடிதேர்வு மூலம் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 76 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 151 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 76 அரசுப் பள்ளிகள், 9 அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள், 66 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 151 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்றார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், மகாலட்சுமி, சுப்புராயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

9 hours ago

கல்வி

9 hours ago

கல்வி

11 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

மேலும்