நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான அக்சயா, அகல்யா ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மாதிரியாக 463 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் ரமேஷ்யுவராஜ், தனியார் பள்ளி ஆசிரியை கலைவாணி தம்பதியினரின் மகள்கள் அக்சயா, அகல்யா . இரட்டை சகோதரிகளான இருவரும் ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்றனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இருவரும் 500-க்கு 463 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
அதேபோல் கணிதப் பாடத்திலும் இருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உருவ ஒற்றுமையில் மட்டுமல்ல. மதிப்பெண்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இவரது குடும்பத்தினரையும், பள்ளியின் சக மாணவ மாணவியர், பள்ளி நிர்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள் சால்வை அணிவித்து இனிப்புகள், பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
கல்வி
2 hours ago
கல்வி
22 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago