பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகள் முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் 3,227 அரசுப் பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 34,738 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 2 லட்சத்து 4,692 பேர் தேர்ச்சி (91.02%) பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 1.22 சதவீதம் அதிகம். அதேபோல, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.

இந்த முறை 3,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 43,985 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 2 லட்சத்து 40,824 பேர் தேர்ச்சி (98.70%) பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.38 சதவீதம் குறைவு. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 99 சதவீதத்துக்கு குறையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரியர் முடிவுகள் வெளியீடு: கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை, பிளஸ் 2 தேர்வுடன் சேர்த்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். அவர்களுக்கான அரியர் பாடங்களின் தேர்வு முடிவுகளையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதை dge.tn.gov.in எனும் தளத்தில் மாணவர்கள் அறியலாம். அதேபோல, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுத 8,191 தனித் தேர்வர்கள் பதிவு செய்தனர். அவர்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். அவர்களும் தங்கள் முடிவுகளை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தயக்கமின்றி அரசின் இலவச உதவி மைய எண் 104-க்கு தொடர்பு கொண்டால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். அதேபோல, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி குறித்த சந்தேகங்களை பள்ளிக்கல்வித் துறையின் 14417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

45 mins ago

கல்வி

1 hour ago

கல்வி

21 hours ago

கல்வி

22 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்