சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு: தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று (மே 6) தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.50, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும். இணைய வசதி இல்லாதவர்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, இணையவழியில் கட்டணம் செலுத்த இயலாதவர்கள், இந்த உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai-15’ என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலமாக வழங்கலாம். உதவி மையங்கள் விவரம், மாணவர் சேர்க்கை கால அட்டவணை ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், 044–24343106 / 24342911 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago
கல்வி
12 days ago