சட்டப்படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் சேர மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை (மே 6) வெளியாகிறது. அதைத்தொடர்ந்து உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கப்படும் நிலையில், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை தொடர்பான அறிவிப்பைதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 10 முதல் 31-ம் தேதி வரை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

15 hours ago

கல்வி

16 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

மேலும்