சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்று பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும்.
அத்தகைய மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற ஆன்லைன் தொடர் நிகழ்வின் 5, 6-வது பகுதிகள் நாளை(மே 4) மதியம் 2 மணி மற்றும் மாலை 6 மணிக்கும், ஏழாவது பகுதிநாளை மறுநாள் (மே 5) மாலை 4 மணிக்கும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
வரும் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள ஐந்தாம்பகுதியில் ‘காமர்ஸ், சார்ட்டட் அக்கவுன்டன்ஸி மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறையில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் உதவி பேராசிரியர் ஆர்.மோகன்ராஜ், ஆடிட்டர் டாக்டர் கோபால்கிருஷ்ண ராஜு ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
» ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்புவோர், பிரபலங்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு
» தமிழகத்தில் 18 இடங்களில் வெயில் சதம்: இன்று பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும்
வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள ஆறாவது பகுதியில் ‘ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ்,சைபர் செக்யூரிட்டி மற்றும் க்ளவுடு கம்ப்யூட்டிங் துறையில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், சென்னை விஐடி ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும்இன்ஜினீயரிங் மூத்த அசோசியேட் பேராசிரியர் டாக்டர் என்.கணேஷ், பெங்களூரு டி-டிஏசி செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.சுதர்சன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள 7-வது பகுதியில் ‘ஆர்க்கியாலஜி கோர்சஸ் மற்றும்வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மெரிடைம் ஹிஸ்ட்ரி அண்ட் மரைன் ஆர்க்கியாலஜி துறை பேராசிரியர் வி.செல்வகுமார், இந்தியதொல்லியல் ஆராய்ச்சி மையத்தின் கண்காணிப்பாளர் (சூப்பிரன்டெண்டிங் ஆர்க்கியாலஜிஸ்ட்) கே.அமர்நாத் ராமகிருஷ்ணா ஆகியோர் உரையாற்றுகின்றனர். இந்த இரு நிகழ்வையும் ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
இந்த நிகழ்வுகளில், பிளஸ்2 முடித்த பிறகு படிக்க வேண்டிய பல்வேறு படிப்புகள், அவற்றுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்விக் கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வல்லுநர்கள் பதில் அளிக்கின்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/UUK003 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடு மூலமாகப் பதிவு செய்துகொண்டு, பங்கேற்றுப் பயனடை யலாம். முதலில் பதிவுசெய்யும் 30 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘எந்திரத் தும்பிகள்’ என்ற நூல் பரிசாக வழங்கப்ப டும்.
முக்கிய செய்திகள்
கல்வி
17 hours ago
கல்வி
18 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago