சென்னை: விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி ஆன்லைன் தொடர் நிகழ்வு வரும்மே 1-ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது
பிளஸ் 2 படித்துவிட்டு அடுத்துஎன்ன படிப்பது, எங்கே படிப்பது,எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்ற பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
இந்த ஆன்லைன் தொடர் நிகழ்வின் நான்காம் பகுதியாக ‘சட்டப் படிப்புகள் மற்றும் துறைசார் வேலைவாய்ப்புகள்’ எனும்தலைப்பில், விஐடி ஸ்கூல் ஆஃப் லா உதவிப் பேராசிரியர் பி.சி.அபிராமி, வழக்கறிஞர் ஏபிஜெஎம்எஸ் நாகூர் ரோஜாஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்வை ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
» நீட் தேர்வை எதிர்கொள்ள 128 மையங்களில் தீவிர பயிற்சி
» சிவில் சர்வீஸ் தேர்வு: தொடர்ந்து சரியும் தமிழக மாணவர் தேர்ச்சி விகிதம்
இந்நிகழ்வில், பிளஸ் 2 முடித்தபிறகு படிக்க வேண்டிய பலவகையான படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், கல்விக் கட்டணம், உதவித்தொகை பெறும்வழிமுறைகள், துறை சார்ந்தவேலைவாய்ப்புகள் குறித்தஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம்ஏதுமில்லை. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/UUK002 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன்உள்ள க்யூஆர் கோடு மூலமாகப் பதிவு செய்துகொண்டு, பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும் 10 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய 'ஏவுகணையும் கொசுக்கடியும்' எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
கல்வி
15 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago