வெயில் தாக்கம்: புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வெயில் தாக்கம் அதிகரிப்பால் புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை (ஏப்.27) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ விதிகளின்படி முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மே 1-ம் தேதி முதல் ஜூன் வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வெயிலின் தாக்கம் புதுவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29, 30. தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை சனிக்கிழமை முதல் புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

12 hours ago

கல்வி

12 hours ago

கல்வி

16 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்