சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், ஆண்டு இறுதி தேர்வும் இன்றுடன் (ஏப்.23) நிறைவு பெற உள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.
இந்த சூழலில், கோடைகால விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
எனவே, அனைத்து பள்ளிகளும் கோடைகால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் சிறப்பு வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது. இந்த உத்தரவை பள்ளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
9 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago