சென்னை: நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
அதேபோல், பயோ டெக்னலாஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கு மாணவர்கள் பிஇடி என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான கேட்-பி மற்றும் பிஇடி தேர்வுகள் நாளை (ஏப்ரல் 20) கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 8-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேலான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வெழுத உள்ள பட்டதாரிகளுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
அவற்றை https://exams.nta.ac.in/DBT/ என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது dbt@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம்பெறலாம். மேலும், கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
23 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago