சென்னை: யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷிஅனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த ஜன.19-ம் தேதி பல்வேறுதொழிநுட்ப ஜவுளி நிறுவனங்கள்,ஜவுளி ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து மானியத்துடன் கூடியதிறன் பயிற்சி வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
யுஜிசி வழிகாட்டுதல்களின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள துறைகளில் பயிலும் பி.டெக் மாணவர்களுக்கான திறன் பயிற்சியை வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ஆராய்ச்சி அமைப்புகளின் பட்டியலை மத்திய ஜவுளி அமைச்சகம் இறுதி செய்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 50 மாணவர்கள் வீதம் 2 மாதம் திறன் பயிற்சியை வழங்க தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு, ஜவுளி அமைச்சகத்திடம் இருந்து ஒரு மாணவர் வீதம் ரூ.20 ஆயிரம் வரை நிதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2-ம் கட்டமாக திறன்பயிற்சி பெறுவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதன்படி திறன் பயிற்சிபெறுவதற்கு யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், ஐஐடி,என்ஐடி, எய்ம்ஸ், ஐஐஎஸ்இஆர் போன்ற முதன்மையான கல்விநிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தகுதியுடையவர்களாவர்.
அதேபோல தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் முதல் 200 இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களும் தகுதியுடையவர்களாவர். எனவே உயர்கல்வி நிறுவனங்கள் யுஜிசி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி திறன் பயிற்சிதொடர்பான தகவல்களை பரப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
கல்வி
5 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago