10-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய விதிமுறை

By செய்திப்பிரிவு

சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஆங்கிலவழி ஆசிரியர்களுக்கு ஆங்கிலவழி விடைத்தாளும், தமிழ்வழி ஆசிரியர்களுக்கு தமிழ்வழி விடைத்தாளும் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டு பணி தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்விஅதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுக்கு, மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கையை பாடவாரியாக, பயிற்றுமொழி வாரியாக சரியாக கணக்கிட்டு, அவர்களை உடனடியாக விடுவிப்பு செய்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கிலவழியில் பயிற்றுவிப்பவர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்தபுதிய விதிமுறையை பின்பற்றும் வகையில் ஆங்கிலம், தமிழ்வழிஆசிரியர்களை கணக்கிட்டு அனுப்ப வேண்டும். மதிப்பீட்டுபணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு ஏப். 11-ம் தேதிக்குள் நியமனஆணை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்த பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று தொடங்கி, 25-ம் தேதி வரைநடைபெறுகிறது. இதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 46 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 hours ago

கல்வி

4 hours ago

கல்வி

4 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

மேலும்