கோடை விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்.2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்.13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்.10, 12-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்.6-ம்தேதி முதல் கோடை விடுமுறையாகும். அதேபோல், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.6 முதல் 21-ம் தேதிவரை ரம்ஜான் பண்டிகை மற்றும்தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த மாணவர்களுக்கு மீண்டும்ஏப்.22, 23-ம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். தொடர்ந்து ஏப்.24-ல்தொடங்கி கோடை விடுமுறை தரப்படும். பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்.26-ம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

22 hours ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

மேலும்