சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்றுடன் (மார்ச் 25) நிறைவடைகிறது.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
» “எனக்கு விஜய பிரபாகரன் ஒரு மகன் போன்றவர்” - ராதிகா சரத்குமார் @ சிவகாசி
» தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் போராட்டம் @ கிருஷ்ணகிரி
304 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயலை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். தேர்வு முடிவு மே 10-ல் வெளியாகும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago