அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் நீட் தேர்வு பயிற்சி முகாம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

தாம்பரம்: நீட் தேர்வு இந்த ஆண்டு மே 5-ம் தேதிநடைபெற உள்ளது. இந்நிலையில், விண்ணப்பம் செய்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25-ம் தேதி முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 510 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியங்களில் உள்ள மாணவர்களுக்கு அச்சிறுபாக்கம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நடைபெற உள்ளது. அதே போல் லத்தூர், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள மாணவர்களுக்கு மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்போரூர், திருக்கழு குன்றம், காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள ஒன்றியத்தில் உள்ள மாணவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாணவர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி - சேலையூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

நாளை தொடங்கும் இந்த பயிற்சி மே 2-ம் தேதி வரை நடைபெறும். வாரத்தில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை நீட் பயிற்சி வகுப்பு நடைபெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளன. இதேபோல் காஞ்சிபுரத்தில் 340 மாணவர்களுக்கும், திருவள்ளூரில் 513 மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 13,197 பேர் பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

7 hours ago

கல்வி

11 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்