சென்னை: விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவ சான்றிதழ்களின்படி... தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு, அரசின் அறிவுறுத்தல்படி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மாற்றுத் திறனாளி கள் மற்றும் எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மருத்துவச் சான்றிதழ்களின்படி முடிவு செய்து, உரிய அனுமதி வழங்கலாம்.
அதேநேரம், தேர்வர்கள் சமர்ப்பிக்கும் மருத்துவச் சான்றிதழ் களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அதற்குரிய கூடுதல் ஆவணங்களை தேர்வெழுதிய பின்னர் சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.
அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பிக்காத மாணவர்களுக்கு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும். மேலும், சலுகைகள் வழங்கப்பட்ட தேர்வர்களின் விவரங் களை, சம்பந்தப்பட்ட மாவட்டதேர்வுத் துறை இயக்குநர்கள் வழியாக, பள்ளிக்கல்வி இயக்குநரகத் துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
6 hours ago
கல்வி
4 hours ago
கல்வி
7 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago