10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட்; மார்ச் 20-ல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 15-ம் தேதியும், தேர்வு மைய படிவங்களை 16-ம் தேதியும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி காலை முதலும், தேர்வு மைய படிவங்களை அதே நாளில் பிற்பகல் முதலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெயர் பட்டியலில் திருத்தம்: இதற்கிடையே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு மார்ச் 18-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறை அவகாசம் அளித்துள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்துக்கு சென்று, தங்கள் பள்ளிக்கான பயன்பாட்டாளர் எண், கடவுச்சொல்லை பயன்படுத்தி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 mins ago

கல்வி

27 mins ago

கல்வி

4 hours ago

கல்வி

5 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

மேலும்