புள்ளியியல், கணினி அறிவியல் தேர்வு எளிது

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கணினி அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல், இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட தேர்வுகள் நேற்று நடைபெற்றன.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 3.59 லட்சம் மாணவர்கள் எழுதினர். 4,987 பள்ளி மாணவர்கள், 157 தனித் தேர்வர்கள் என மொத்தம் 5,144 பேர் தேர்வெழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாகவும், கணினி பயன்பாட்டியல் தேர்வு சற்று கடினம் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, “கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடங்களின் வினாத்தாள்கள் எளிதாக இருந்தன. இவற்றில் சராசரி மாணவர்கள்கூட அதிக மதிப்பெண்களை பெறமுடியும். இந்த ஆண்டு தேர்ச்சி உயர்வதுடன், முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்’' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE