பெரியார் பல்கலை. இணையவழி கற்றல் திட்டத்தில் எம்பிஏ பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில், இணையவழிக் கற்றல் திட்டத்தில் எம்பிஏ பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை வரும் 31-ம் தேதி வரை இணையவழியில் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைநிலை மற்றும் இணையவழி கல்வி மையம் (PRIDE), 2001-ல் இருந்து தொலைநிலைக் கல்வியை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜனவரி 2024 அமர்வு முதல் இணையவழி கற்றல் திட்டத்தில், எம்பிஏ பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கு, பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அங்கீகாரம் பெறப்பட்டு, தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் pride.periyaruniversity.ac.in/app/webroot/pucdoe என்ற இணையதள முகவரியில் வெளியிடப் பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கற்றல் மேலாண்மை மென்பொருள் மூலம் தனித்துவமான பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வீடியோ படங்கள், பிடிஎஃப் மென் பாடங்கள் மற்றும் கலந்துரையாடல் தளம் போன்றவை மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நபர்களுக்கும், நேரிடையாக கல்லூரிக்கு சென்று வகுப்பில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கும், இந்த இணைய வழி எம்பிஏ பாடப்பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய எம்பிஏ பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கையானது, வரும் 31-ம் தேதி வரை இணையவழியில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு தொலைநிலை மற்றும் இணையவழி மையத்தை 0427- 2345918, 94447 08425 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

15 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

மேலும்