சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் தேர்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தேர்வை 7.15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத்தேர்வு குளறுபடியின்றி முறையாக நடைபெற ஏதுவாக பல்வேறு முன்னேற்பாடுகள் தேர்வுத் துறையால் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மட்டும் தலா 3,302 தேர்வு மையங்களும்,10-ம் வகுப்புக்காக 4,107 மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டைவிட அதிகம். முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
கல்வி
18 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago