மதுரை: மதுரை அப்பள வியாபாரி டி.பி.ராஜேந்திரன் ரூ.82.5 லட்சம் மதிப்பீட்டில் செல்லூர் கைலாசபுரம் மாநகராட்சி பள்ளிக்கு புதிய வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வு அறைகள் உள்ளிட்டவை நமக்கு நாமே திட்டத்தில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் செல்லூர் கைலாசபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்பாளரான திருப்பதி விலாஸ் உரிமையாளர் டி.பி.ராஜேந்திரன் நன்கொடை வழங்கிய ரூ.82.5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
இங்கு புதிதாக தரைத்தளம், முதல் தளத்தில் வகுப்பறைகள், ஆழ்துளை கிணறு, அமரும் இருக்கைகள், புதிய கழிப்பறைகள், சமையலறை, நுழைவு வாயில், பேவர் பிளாக் பதித்தல், சாய்வு தளம், இரும்பு கதவுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுடன் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேயர் இந்திராணி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் தனியார் பங்களிப்பாளர் திருப்பதி விலாஸ் உரிமையாளர் டி.பி.ராஜேந்திரன் கவுரவிக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே ரூ.3 கோடி வரை மாநகராட்சி பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. துணை மேயர் தி.நாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் பூமி நாதன், மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
20 hours ago
கல்வி
20 hours ago
கல்வி
20 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago