கடும் நிதி நெருக்கடியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்: துணைவேந்தர் வேதனை

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஆண்டுக்கு ரூ.47 கோடி நிதிப்பற்றாக்குறை இருப்பதாக துணைவேந்தர் ந.சந்திரசேகர் வேதனை தெரிவித்தார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 30-வது பட்டமளிப்பு விழா தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக்கழக நிதி நெருக்கடி குறித்து குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: “திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு முடியாமல் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இம்மாதத்துக்கான ஊதியத்தை வழங்குவதற்கே ரூ.2.5 கோடி பற்றாக்குறை இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.47 கோடி நிதி பற்றாக்குறையுடன் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.

இதே நிலை நீடித்தால் 6 மாதத்தில் பல்கலைக்கழகத்தில் நிதிநிலைமை மிகமோசமாகும். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிலைமையே சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கும் ஏற்படும். ஊதியம் வழங்குவதில் உள்ள பற்றாக்குறையை சமாளிக்க தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக வருங்கால வைப்புநிதியிலிருந்து எடுத்து செலவு செய்யும் நிலையுள்ளது. இதற்கு அரசு அனுமதியை பெறவேண்டும்.

பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் மூலம் வரும் அனைத்து நிதிகளும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் பல்கலைக்கழக நிர்வாக குழு மூலம் நிதி கோரியுள்ள நிலையில் அதுவும் கிடைக்கப்பெறவில்லை. மத்திய அரசால் வழங்கக்கூடிய நிதியும் தடைபட்டுள்ளது. சி.எஸ்.ஆர் நிதிகளும் கிடைக்கப்பெறாமல் மிகுந்த மோசமான நிலையை சந்தித்து வருகிறோம். ஆண்டுக்கு ரூ. 60 கோடி விதம் பல்கலைக்கழகத்திற்கு அரசு பணம் தர வேண்டி உள்ளது. ஆனால் கணக்குத் தணிக்கை என்ற பிரச்சினையை காரணம் காட்டி அந்தத் தொகையையும் 2016-ம் ஆண்டு முதல் நிறுத்தி வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

12 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

23 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

மேலும்